Tuesday 29 August 2017

சென்னை தமிழ்ச்சொல்லா?


This article says மேடு , Medu rasa pattinam become madras. Chennai is purely telugu. But it's purely FAKE story.

Madras is not மேடுராசு:)))
மேடு தமிழ் தான்; ராசு?
Read, Chennai NOT Madras, book of AR Venkatachalapathy, with land deeds documents etc

சென்னை comes from Chennappa Nayakkan only, who was the last vassal of Vijayanagar kingdom in 1650s..
But just bcoz he was telugu native, doesnt mean the word is Telugu:)
சால= இன்னிக்கு தெலுங்குன்னா.. சால உறு தவ நனி கூர் கழி உரிச்சொல்லெல்லாம் தெலுங்குச் சொல் ஆயீருமா?:) என்ன பேதைமை இது!
சென்னாகிதிரா
சென்ன கேசவ பெருமாள்
சென்ன நாயகன்
சென் எ. தமிழ்ச் சொல்லே, பிற திராவிட மொழிகளிலும்!
சென்= நலம்/ உயர்வு எ. பொருள்!

சென்னி எ. சொல்லுக்கும், சென் என்பதே வேர்!
சென்ன்னுக்கு, செம் என்பது வேர்!
செம்= செம்மை/ நலம்/ உயர்வு
செம்து+இல்= சென்து+இல்= செந்தில்

சீர் கெழு செந்தில்= சிலப்பதிகாரம்
சென் அணிச் சீர்மை!
அது தான் சென்+அப்பன்= சென்னப்பன்!

சென்னப்ப நாயக்கன் தெலுங்குக்காரன் என்பதால்..
சென்னப்பனில் உள்ள அப்பன்= தெலுங்கா?:)

*சென்னப்ப நாயக்கன் பட்டினம்= சென்னைப் பட்டினம்
*மதுரசேனன் பட்டினம்= மதுராச பட்டினம்.

http://www.chennaicorporation.gov.in/Tamil/about-chennai-corporation/orginandGrowth.htm

சென்னப்பன் விற்ற மணல்காடு நிலத்தில், பட்டினம் நன்கு கட்டப்பட்டு.. வள்ளலார் காலத்திலேயே, "சென்னை" எ. தமிழ் இலக்கியம் ஏறி விட்டது!

தரும மிகு சென்னையில், கந்த கோட்டத்துள் வளர்
தவம் ஓங்கு கந்தவேளே!

பாரதியார் கவிதைகள்/ கட்டுரைகளில்.. சென்னை எ. தேடிப் பார்க்கச் சொல்லுங்க:)

சென்னை , சென்/செம் வேர்ச்சொல் கொண்ட, சிலப்பதிகாரம் தொட்டு பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொல்லே

தரவு : Dr KRS - @kryes 

Saturday 4 February 2017

NEET and way forward - #MyOpinion

NEET and way forward

I have been reading up a lot in the news , discussions, impact to our rural and poor students If NEET becomes mandatory for under graduate Medical and Engineering courses.

Let's look into few data available

1. There are 3% Govt school students joining Govt medical colleges & 
2. only 30% are from rural/sub urban background.
3. Engineering also could be little more numbers for rural/sub urban 30+%. 

Let's look up a better solution to find out for everyone of us with better results from current scenario.

NEET is a new all india entrance test which will be based on CBSE/ICSE.

So the list of hurdles before kept us
1. New and complex syllabus which is different form current State board.
2. Training or monetary support required for rural students

3 options/way forward 

Option 1 - Improve state syllabus and hold NEET for sometime until we are capable

Improve the current syllabus and train the students to cater to all india level syllabus with long term road map. It might take 5-10 years which is less probable with the current political scenario, or willingness to take up the challenges.
so this option is less road travelled and not feasible now to take NEET even after 5 years delay.

Option 2 - Accept the NEET with special provisions

Adapt a geographic reservation to ensure rural/sub urban students still get their seats via % representation(allocate% to rural, suburban, urban based on the % students). This might need lot of analysis and willingness from state to form fair policy. But we do not have to fear of losing seats also we can still plan road map to improve educational factors projected by UN with less impact to students.

I find this option feasible as we have earlier have 69% implementation and can tweak for geographic representation.

Option 3 - Reject NEET and continue current system of admission

This is going to be challenged by Union in sometime as current legislation to exclude TN might get rejected and might not stand in SC. Also we need to also consider UN educational factor to improve our standards inline.

If this option is implemented, still we need to improve our skill sets and quality inlne with international standard outlined.

Please share your views and suggestion for further readings to understand more.

My facebook post, discussion below here and I am ready to correct any misunderstanding. 

Sunday 25 October 2015

Tum saath ho lyrics in Tamil

Tum saath ho ( you are with me ) , a song from yet to be released hindi movie Tamasha.

This song was an immediate inspiration when I heard first time last week , and video of the song had more impact for me to complete.  Imtiaz is fantastic when composing visuals for a musical piece. 

I don't even know 1 % of Hindi and these are somewhat fresh i can say ;) 

Music : A.R.Rahman , Movie : Tamasha , Original lyrics : Irshad Kamil 

                                             
காலையிலே பனித்துளி ஆகி
கரைந்த பின்னே காதலாகி
என்னைத்தேடி எங்கே செல்வேனோ?

கண் முன்னே கடந்து சென்றாய்
உன்னுடன் நடந்து செல்ல
பயிற்சிகள் தினமும் எடுக்கிறேன்        
பின்னூடே காதல் வரும் ஆனால் உன்னிடம்

என் பாதிக்காதலே
உனை நேசிக்காமலே              

இருந்தால் என்றும் இருந்தால்
உயிர் துறப்பேன்
நகரும் நதியாகி கொஞ்சம் புயலாகி
நிலத்தில் உணவாகி போகும் இயற்கையே
நீதான் எந்தன் செயற்கையே          

என் பாதிக்காதலே உனை யாசிக்காமலே
இருந்தால் என்றும் இருந்தால் உயிர் துறப்பேன்


தேடித்திரிந்தேன் உன்னைத் தேடித்திரிந்தேன்
எந்தன் உலகில் எங்கும் நிறைய
முன்னும் பின்னும்
எந்தன் காதல் குலுங்கி
வாழ்க்கைத்தேரில் நானும் வலம்வருவேன்

என்னோடு நீ உன்னொடு நான் வானமே
ஏன் சொல்லும் அன்பினிலே
ஏன் மிஞ்சினாய் எனைக்கெஞ்சினாய் மழைத்தூறல்கள் போலவே
உந்தன் விழியால்
எனைத்தூக்கித் திரிந்தாய்
எந்தன் புவியில் எங்கும் நிறைந்தாய்              
                   
என்னோடு நீ
என்றும் உன்னோடு நான்                                                                                                                                                                                                                                                                                                                                  
பகல் நேரம் சுடும் நிலவாய்              
மாலை நேரம் பனிக்கதிராய்
எங்கே செல்லும் என் வானிலை
என்னுள்ளே நிழல் தொடும்
தூரம் நடப்பேன்                                         

Saturday 9 March 2013

உன்னுடன் நானும் நடக்கவே, பயிற்சிகள் தினம் எடுக்கிறேன்

மனப்புறம்  பூந்தளிர் பூக்க வைத்தாய்
நினைத்திட நினைவுகள் கொட்டிவைத்தாய்
கனா புறங்களில் அனுதினம்
என்னுடன் இருந்து விட்டாய்

பூக்களில் தேனாய் சுரந்து விட்டாய்
பாக்களில் பொருளாய் சேர்ந்து விட்டாய்
விக்கலில் உன்னை மறுமுறை நினைக்க வைத்தாய்

கால்கள் தரையினில் மிதக்குதே
உனைக் கண்டவுடன் உடல் தகிக்குதே
மனதினில் புரை ஏற்றுதே
காதல் உரை உன்னை புரியவே !
மறுமுறை என்னை தெளியவே
உன்னுடன் நானும் நடக்கவே
பயிற்சிகள் தினம் எடுக்கிறேன்

உன்னுடன் வாழ்ந்து பார்க்க துடிக்குதே
இதயமும் புதியதாய் இளகுதே
என்னை ஏற்றுக்கொள் அது புரிந்திடுமே !

Sunday 24 February 2013

ஏதோ சில காலம் என்னுள்ளே...

நித்திரை என்றால் கனவுகள் கொட்டும்
கவிதை என்றால் உன்னை மீட்டும்
என் மனம் புரியாதோ ?
அன்பே அன்பே என் மனம் புரியாதோ !

ஏதோ உன்னை கண்டாலே என் மனதுள்ளே
சிறு பூக்கள் பூக்கிறதே
அன்பே நீ வந்த வழி எதுவென்று கூறாயோ ?
நீ வந்ததும் என் மௌனம் உடனே கலைந்தது
அன்பே அன்பே உயிர் வரை உள்ளே வா
சில காலம் நானில்லை நானாக

நீ என்றால் பூக்கள் மகிழும்
நீ என்றால் பறவைகள் சிரிக்கும்
என் மனம் புரியாதோ ?
நீ என்றால் எனக்கு ஆதி அந்தம்
பூமிக்கு வானம் போல
என்னுடன் நடப்பாயோ ?

ஏதோ சில காலம் என்னுள்ளே
கவிதைகள் தைத்தாயோ ?
காலம் உன் கைகளில் சிரிக்கிறதே
எனைப் பாத்துதான்
அழகே உனைக் கண்டு
அதிரும் நில நடுக்கம் கூட அமைதியாகிறதே
கனவு என்று மறுத்தும்
கவிதை எழுதும் நாள் குறித்தேன்.